பெண்ணின் தாலிக்கொடி அறுப்பு: வசமாக சிக்கிய இராணுவ வீரர்
வவுனியாவில் தாலிக்கொடியை அறுத்து தப்பி சென்ற இராணுவ வீரர் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா கனகராயங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியினை சிவில் உடையில் வந்த இராணுவ வீரர் ஒருவர் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து, போக்குவரத்து பொலிஸாரின் உதவியுடன் விரைந்து செயற்பட்ட அப்பகுதி பொதுமக்களால் அவர் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரிடம் ஒப்படைப்பு

சந்தேகநபர் சிவில் உடையில் நடமாடிய இராணுவீரர் என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பொதுமக்களால் கனகராயன்குளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா கனகராயங்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan