21 நிறைவேற்றப்படுமா...! இலங்கையில் மீண்டும் குழம்பியுள்ள அரசியல்!
21 தொடர்பில் நிலைப்பாடுகள்
அரசியல் அமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில், பல்வேறு அரசியல் கட்சிகளின் பல்வேறு நிலைப்பாடுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
எதிர்வரும் வாரம் இது தொடர்பான கேள்வி பல்வேறு மட்டங்களிலும் கேட்கப்படும். 21 ஐ நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் போதுமான ஆதரவை திரட்ட முடியும் என்று அரசாங்கத்தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சி சந்தேகம்
எனினும், எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் உட்பட பலர் இதில் சந்தேகம் கொண்டுள்ளனர்.
ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணியில் சுமார் 103 உறுப்பினர்கள் இருப்பதாக அறியப்படுகிறது.
எனினும் 21 தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதால், இந்த எண்ணிக்கையில் எத்தனை பேர் ஆதரவாக இருப்பார்கள் என்பதை கணிக்கமுடியவில்லை.
இதன் காரணமாகவே 21வது திருத்தம் நிறைவேற்றப்படும் வரை மேலும் அமைச்சர்கள் மற்றும் புதிய இராஜாங்க அமைச்சர்களின் நியமனத்தை ஜனாதிபதி ராஜபக்ச நிறுத்தி வைத்துள்ளார்.

ஆதரவு இல்லை
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் முடிவு இன்னும் முறைப்படி தெளிவாகவில்லை.
எனினும் ஜனாதிபதியின் நிறைவேற்றுத் தன்மை நீக்கப்படாத நிலையில் 21ஐ ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்காது என்றே கருதப்படுகிறது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 21ஐ ஆதரிக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.
ரணிலுக்கும் வெற்றி
இந்தநிலையில் 21 வது திருத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், அது பிரதமர் விக்கிரமசிங்கவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும்.

அத்துடன் ஒப்பீட்டளவில் குறைந்த அதிகாரங்கள் இருந்த போதிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தற்போது முன்பை விட மிகவும் நிம்மதியடைவார் என்று அரசியல் தரப்புக்கள் கூறுகின்றன.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan