நத்தார் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட துயரம் - குழந்தையை காப்பாற்ற முடியாத சோகம்
பலாங்கொடயில் நத்தார் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும் போது, பிள்ளை ஒன்று கால்வாயில் விழுந்து உயிரிழந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது.
2 வயதான அருள்ராஜ் தைட்ஸ் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த குழந்தையின் தாய் தகவல் வெளியிடுகையில், வீடு சுத்தம் செய்யும் போது நேற்று முன்தினம் குழந்தை வீட்டில் தூங்க வைக்கப்பட்டது.
கால்வாயில் வீழ்ந்த குழந்தை
இதன்போது வீட்டின் வர்ணப்பூச்சு உலராததால், வாயில் மற்றும் கதவு திறந்திருந்தது. சிறிது நேரம் கழித்து நான் வீடு திரும்பிய போது, என் மகன் படுக்கையில் இல்லை.

உடனடியாக அங்கிருந்தவர்களுடன் இணைந்து தேடியபோது, அவர் வீட்டின் அருகே ஓடும் கால்வாயில் விழுந்திருந்தார்.
விரைவாக முச்சக்கர வண்டியில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, பெட்ரோல் தீர்ந்துவிட்டது.
மரண விசாரணை
மற்றொரு முச்சக்கர வண்டியில் செல்லும்போது, வாகனத்தின் ஓட்டுநரும் பேருந்துடன் மோதி காயமடைந்தார். எனது குழந்தையின் காலிலும் காயம் ஏற்பட்டது.

விரைவில் வேறு வாகனத்தில் பலாங்கொடை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” என தாயார் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நீரில் மூழ்கி மூச்சுத் திணறல் காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாக பலாங்கொட மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜயதிலக தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam