கழிவறைக்குள் பிறந்த குழந்தை - தப்பியோட முயன்ற இளம் தாய்
கேகாலை, கரவனெல்ல பொதுப் பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையில், குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையை கைவிட்டுச் செல்ல முயற்சித்ததாக கூறப்படும் 30 வயதுடைய பெண் நேற்று நண்பகல் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணினால் அந்த குழந்தை நேற்றைய தினம் பிரசவிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.
கழிவறைக்குள் பிறந்த குழந்தை
பிரசவித்த பச்சிளம் குழந்தையை கழிவறையிலிருந்த நீர்த் தொட்டிக்குள் வைத்துவிட்டு செல்ல அந்த பெண் முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தை கண்ட பொதுமக்கள் அந்தப் பெண்ணைப் பிடித்து, பின்னர் அவரையும் குழந்தையும் கரவனெல்ல ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தை நல்ல உடல் நலத்தில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri