மகிந்த தரப்பை பழிவாங்கிய அநுர அரசு - ஏமாற்றத்தில் நாமல்
அனுராதபுரத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு மிகப்பெரிய இரண்டு விளையாட்டு மைதானங்களையும் வழங்க அந்தப் பகுதி ம் மாநகர சபை மறுத்துள்ளது.
குறித்த நாட்களில் வேறு தரப்பினரால் வாலிசிங்க ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானமும் சல்காது விளையாட்டு மைதானமும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அன்றையதினம் அவற்றை வழங்க முடியாது என அனுராதபுரம் மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார்.
அத்துடன், இதற்கு பொருத்தமான வேறொரு தினத்தை ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் பரிசீலிக்குமாறும் அறிவித்துள்ளார்.
கோரிக்கை நிராகரிப்பு
எனினும், சல்காது மைதானத்தை பெறுவதற்காக தங்களால் முன்னரே விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இருந்த போதிலும், விண்ணப்பித்த வேறு ஒரு தரப்பினருக்கு குறித்த மைதானத்தை வழங்குவதற்கு மாநகர சபை செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் வாலிசிங்க ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானமும் மூன்றாவது தரப்பினரால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி தங்களுக்கு வழங்குவது மறுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேயரின் அறிவுறுத்தலுக்கமையவே மேற்கொள்ளப்பட்டதாகவும் மொட்டுக் கட்சியின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.