திறந்த வெளியில் கைவிடப்பட்டு சென்ற பெண் குழந்தை
அனுராதபுரத்தில் குடும்ப சுகாதார ஊழியர் ஒருவரின் வீட்டின் முன் குழந்தை ஒன்று கைவிடப்பட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொன்வேவ பகுதியில் உள்ள குடும்ப சுகாதார ஊழியர் ஒருவரின் வீட்டின் முன் நேற்று ஒரு மாத பெண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக மஹாவ பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்ப சுகாதார ஊழியர் இந்திராணி அனுலாவின் வீட்டின் முன் திறந்தவெளியில் கதிரையொன்றில் பெண் குழந்தை கைவிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெண் குழந்தை
சம்பவம் குறித்து குடியிருப்பாளர்கள் மஹாவ பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் குழந்தையை நிகவெரட்டிய மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சம்பவம் குறித்து மஹாவ பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் குழந்தையின் தாய் மற்றும் தந்தை இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



