உயிருக்கு போராடும் யானை குட்டி! (Video)
முல்லைத்தீவு குமுழமுனை மேற்கு கரடிப்பூவர் கிராமத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் யானை ஒன்று விவசாயிகள் நிலத்தில் வீழ்ந்துள்ளது.
சுமார் மூன்றரை அகவைகொண்ட குறித்த குட்டியானை வாய் காயத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக உணவு உட்கொள்ளமுடியாத நிலையில் விவசாயிகளின் விளைநிலத்திற்குள் வந்து வீழ்ந்துள்ளது.
யானை வீழ்ந்துள்ள சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கிராம மக்கள் தகவல் வழங்கியதையடுத்து இன்று (31.12.21) காலை சம்பவ இடத்திற்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடைமருத்துவர் டி.கிரிதரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்துள்ளார்கள்.
இந் நிலையில் யானை எழுந்து நடக்கமுடியாத நிலையில் காணப்படுவதுடன், சிகிச்சை மேற்கொண்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையினை தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.







