சடலமாக மீட்கப்பட்ட நான்கு வயது காட்டுயானைக் குட்டி
கந்தளாய் - சூரியப்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரிய வெவ குலத்திற்கு அருகிலுள்ள வயல் பகுதியில், சுமார் நான்கு வயதுடைய காட்டுயானைக் குட்டி ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யானைக் குட்டிக்கு சிறிய தந்தம் இருந்ததாகவும், உடலில் பலத்த காயங்கள் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகத்திற்கிடமான மரணம்
இதன் காரணமாக, இது இயற்கை மரணம் அல்ல என்பது சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.
இது கொல்லப்பட்டதா அல்லது துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததா என்பது தொடர்பில் தெளிவுபடுத்த, சூரியப்புர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விவசாயி ஒருவரால் வழங்கப்பட்ட தகவலின் பேரில் வனஜீவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் சூரியபுர பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
