புதிய வருடத்திற்கு ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் அடுத்த வருடம் தொடர்பில் பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்புக்கள்
2023ஆம் ஆண்டிலும் என்னவெல்லாம் நடக்கப் போகின்றது என்பது எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருக்கின்றது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடக்கப் போகும் விபரீதங்கள் குறித்து பல கணிப்புக்கள் வெளியாகியுள்ளன.
சூரியனை நோக்கி பூமி நகர்ந்தால் கதிர்வீச்சு அதிகமாகி புவியில் வெப்பநிலை அதிகரித்து சோலார் சுனாமி என்ற சூரிய புயல் வீசக்கூடும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.
2023இல் என்ன நடக்க போகிறது?
பாபா வாங்காவின் கணிப்புகள்படி பல சம்பவங்களும் நடைபெறுவதால் அவரது கணிப்புக்கு பலரிடத்திலும் வரவேற்பு இருந்தே வருகிறது.
2023ம் ஆண்டிலும் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பது குறித்த பாபா வாங்காவின் கணிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதில், உலகில் உள்ள அணு உலைகள் உருகுவதால் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் மாற்றம் ஏற்படுமாம். ஒருவேளை பாபா வாங்காவின் கணிப்பு படி பூமியில் சிறிய மாற்றம் நடந்தால்கூட அது கால நிலையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
இதுபோக, சூரியனை நோக்கி பூமி நகர்ந்தால் கதிர்வீச்சு அதிகமாகி புவியில் வெப்பநிலை அதிகரித்து சோலார் சுனாமி என்ற சூரிய புயல் வீசக்கூடுமாம்.
இதனையடுத்து, மக்கள் மீது உயிரியல் ரீதியான பயோ வாரை உலகின் மிகப்பெரிய நாடு மேற்கொள்ளும் என்றும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும் பாபா வாங்கா கணிப்பு எச்சரிக்கிறது.
மேலும், 2023இல் அணுமின் நிலையம் வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைனில் ஒரு பேரழிவு ஏற்படும் என்ற அச்சம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.