மனித கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் ஒன்றினால் திருகோணமலை மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்ட "மனித வியாபாரத்தினை எதிர்த்து போராடுவதற்கு அரசாங்கம் மற்றும் சமூக மைய அமைப்புகளை வலுப்படுத்துதல் மூலம் அதிகரித்த விளைவை ஏற்படுத்துதல் " எனும் திட்டத்தின் திட்ட முடிவும் அனுபவப்பகிர்வும் தொடர்பான நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (17) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பலர் பங்கேற்பு
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன்போது மனித வியாபாரம் தொடர்பான காணொளி காட்சிப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மனித விற்பனைக்கு எதிரான மாவட்ட மன்ற உறுப்பினர்கள், சமூக அவதானிப்பு குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் நிறுவன உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.