திருகோணாமலை செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலய மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம்
போசாக்கு மாதத்தினை முன்னிட்டு, திருகோணாமலை செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலய மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலமும், ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்குணவு எனும் தொனிப்பொருளில், கண்காட்சி ஒன்றும் நேற்று வெள்ளிக்கிழமை(4) இடம்பெற்றன.
செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயமும், பட்டணமும் சூழலும் பொது வைத்திய சுகாதார அதிகாரி அலுவலகமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
செல்வநாயகபுரம் இந்து மகாவித்தியாலய அதிபர் மற்றும் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சயலொலிபவன் ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, பழங்கள், தானியங்கள், மரக்கறி வகைகள் போன்ற நஞ்சற்ற உடல் ஆரோக்கியத்திற்கான உணவு வகைகள் பாடசாலை மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
விழிப்புணர்வு
கண்காட்சியை பார்வையிட, வருகை தந்த அதிதிகளுக்கு போசாக்கு உணவு தொடர்பான விளக்கத்தினையும் மாணவர்கள் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆரோக்கிய உணவு குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், நடைப்பவனி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நடைபாவணியில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், உப்புவெளி சுகாதார அதிகாரி அலுவலக சுகாதார ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் தலைவர் வெள்ளத்தம்பி சுரேஷ் மற்றும் உப்புவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, திருகோணமலை மாவட்ட தாய்சேய் பிராந்திய வைத்தியதிகாரி மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






