பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி
திருகோணமலை மாவட்ட செயலகம், நீதி அமைச்சு மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலின் ஏற்பாட்டில் பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நெறியானது பாடசாலை ஆசிரியர்களுக்கு (22) மற்றும் (23) ஆம் திகதிகளில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை மாணவர்கள்
"பாடசாலை மாணவர்கள் தங்களுடைய பிணக்குகளை தாமே தீர்த்து கொள்ளுதல்" என்ற தொனிப்பொருளின் கீழ் இவ்விழிப்புணர்வு பயிற்சி நெறியானது ஆசிரியர்களுக்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ஐந்து பாடசாலைகளை தெரிவு செய்து ஒரு பாடசாலையிலிருந்து ஐந்து ஆசிரியர்கள் வீதம் மொத்தமாக 25 ஆசிரியர்கள் இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது மாவட்ட மத்தியஸ்த உத்தியோகத்தர், பிரதேச செயலக மத்தியஸ்த உத்தியோகத்தர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.



