உரிமைகள் மற்றும் சமூக தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் விழிப்புணர்வு
மட்டக்களப்பில் இயங்கிவந்த மனித உரிமைகள் முதலுதவி மையமானது மனித உரிமைகள் மற்றும் சமூக தொழில் முனைவோர் மேம்பாட்டு மையமாக சேர்ந்து பயணிக்கவுள்ளது.
இதனைத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் செயற்பாடகள் இன்று (31.08.2025) மட்டக்களப்பில் இடம்பெற்றன.
கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் பனிப்பாளர் வடிவேல் ரமேஷ் ஆனந்தனின் வழிகாட்டுதலில் றைற் ரூ லைப் நிறுவனத்தில் மனித உரிமைகள் மற்றும் சமூக தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் இணைப்பாளர் சிவானந்தன் உபதாரணி தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பொதுச் சந்தை மற்றும் செங்கலடி பேருந்து தரிப்பு நிலையம், உள்ளிட்ட பல இடங்களிலும் இந்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.
மட்டக்களப்பு சந்திவெளியிலிருந்து இயங்கிவரும் மனித உரிமைகள் முதலுதவி மையம் இன்றிலிருந்து அது மனித உரிமைகள் மற்றும் சமூக தொழில் முனைவோர் மேம்பாட்டு மையமாக பயணிக்கவுள்ளது.
மனித உரிமைகள் தொடர்பில் செயற்பட்டு வந்த தமது தன்னார்வ அமைப்பானது இனிமேலும் மனித உரிமைகளுடன் சேர்த்து சமூக தொழில் முனைவோர் மேம்பாட்டு தொடர்பிலும் கரிசனை கொண்டு செயற்படவுள்ளதாக அவ்வமைப்பின் இணைப்பாளர் சிவானந்தன் உபதாரணி தெரிவித்தார்.












ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 13 மணி நேரம் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam
