சிறுவர்களுக்கு இடம்பெறும் துன்புறுத்தல்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி (Photos)
முல்லைத்தீவில் சிறுவர்களுக்கு எதிரான சரீர தண்டனையினை நிறுத்துவதுடன் வலைத்தள துன்புறுத்தல்களையும் இல்லாமல் செய்யும் சமூக விழிப்புணர்வு பிரச்சார கவனயீர்ப்பு பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பேரணி புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இன்று (04.09.2023) காலை 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு பிரதேச செயலகத்தில் நிறைவுற்றுள்ளது.
பேரணியின் நிறைவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் விழிப்புணர்வு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஆக்கிரமிப்பைத் தடுக்கத் தமிழ்ச் சமூகம் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை: கஜேந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டு
பேரணியில் கலந்து கொண்டோர் விபரம்
குறித்த பேரணியில் இன்றைய வித்தே நாளைய விருட்சம், சிறுவர்கள் எங்கள் வீட்டு பிள்ளைகள் அவர்களை பாதுகாப்பது பெற்றோரின் கடமை, சிறுவர் உரிமை சட்டத்தை மதியுங்கள், அப்பா, அம்மா, அக்கா, அண்ணா எமது பாதுகாப்பு உங்கள் பொறுப்பு, சிறுவர்களை சங்கடமான சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பாக வாழ வழி செய்வோம் போன்ற பல்வேறு வாசகங்களையுடைய பதாதைகளை தாங்கியவாறு பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் , முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
