தேர்தல் ஆணைக்குழுவினால் யாழில் முன்னெடுக்கப்படவுள்ள விழிப்புணர்வு வேலைத்திட்டம்!
தேர்தல் ஆணைக்குழுவினால் சர்வதேச ஜனநாயக தினத்தையொட்டி தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகளை திணைக்களங்கள்/ பாடசாலைகள் மத்தியில் அறிமுகப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் யாழ். மாவட்டத்தில் நெடுந்தீவு பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் நெடுந்தீவு பிரதேசத்திற்குட்பட்ட ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்/ யுவதிகளுக்கான E Services தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தினை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தால் விசேடமாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வேலைத்திட்டம்
அதன்படி, எதிர்வரும்(16) ஆம் திகதி மு.ப 9.30 தொடக்கம் மு.ப 11.15 வரை பாடசாலைகளில் கல்வி கற்கும் 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான நிகழ்வானது யா/நெடுந்தீவு மகாவித்தியாலயத்திலும், 11.30 தொடக்கம் 12.45 வரை ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்/யுவதிகளுக்கான நிகழ்வானது நெடுந்தீவு பிரதேச செயலகத்திலும் நடைபெற உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




