இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பியவர்களின் காணிப்பிரச்சினை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு
திருகோணாமலை மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் மற்றும் IOM நிறுவனமும் இணைந்து இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பியவர்களின் காணிப்பிரச்சினை மற்றும் ஏனைய சேவைகளை பெற்றுக்கொள்ளல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வானது திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இன்று (11) மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்தியாவிலிருந்து திரும்பியவர்களின் காணி சம்மந்தமான பிரச்சினைகளுக்கான சிறந்ததொரு தீர்வாக இவ்செயலமர்வு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
காணிப்பிரச்சினை
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பி வந்தவர்களை அவர்களுடைய சமூகத்தோடு மீண்டும் ஒருங்கிணைக்கும் திட்டத்திற்குள் ஒரு பகுதியாக இதனை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே.விஜயதாசன், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன், தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி, IOM நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி மயூரன் மேரி லாம்பர்ட், IOM நிறுவன பொறுப்பாளர் எம்.ஜெயராயன், IOM நிறுவன ஆலோசகர் என்.நிர்த்தனரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.