சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறையில் விழிப்புணர்வு போராட்டம்
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் (Jaffna) ஊர்காவற்றுறையில் விழிப்புணர்வு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்றையதினம் (05.06.2024) ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் கோவில் துறைமுகப் பகுதியில் நடாத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'பாரம்பரிய கடற்றொழிலை பாதிக்கும் அட்டைப் பண்ணையை உடன் நிறுத்து', 'கடற்றொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே', 'கடற்றொழிலாளர்களை வாழவிடு' போன்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டோர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊர்காவற்றுறை பிரதேச சபை உறுப்பினரின் ஒருங்கிணைப்பில், பொது அமைப்புகள், ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |