தகவல் அறியும் சட்டம் தொடர்பில் வவுனியாவில் விழிப்புணர்வு முகாம்
வவுனியா மாவட்டத்தில் இயங்கிவரும் நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் சேவை வழங்கல் முகாம் நேற்றையதினம் (09) வவுனியா பிரதேச செயலகத்தின் இரசேந்திரகுளம் கிராம சேவகர் பிரிவில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் 200ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். மக்கள் தமது உரிமையை அறிந்து பயன்படுத்தும் ஆர்வத்துடன் கலந்துகொண்டதைக் காண முடிந்தது.
இந்நிகழ்வை ஒட்டி நிறுவன இணைப்பாளர் வ.ரவீந்திரகுமார் அவர்கள் கருத்துரைத்தபோது, “சட்டம் அனைவருக்கும் சமமானது.
அதன்படி, தகவல் அறியும் சட்டம் குறித்த அறிவும், அதனை நடைமுறையில் பயன்படுத்தும் திறனும் மக்களிடம் உருவாகுவது மிக முக்கியம். இதனை நடைமுறையில் கொண்டு வருவதற்காக தற்போது வவுனியா மாவட்டத்தில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.









தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
