யாழில் நடைபெற்ற திறன் விருத்தி நிகழ்வில் வெற்றியாளர்கள் கௌரவிப்பு
தொழில் முயற்சியாண்மை திறன் விருத்தி நிகழ்வின் வெற்றியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட முகாமைத்துவ திறன் விருத்திப் பயிற்சி நிலையத்தில் நேற்று (19.02.2024) காலை 9:30 மணியளவில் இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
பெண்கள் மேலாண்மை அமைப்புடன் இணைந்து நடாத்தப்பட்ட இந்நிகழ்ச்சித்திட்டமானது, பெண் தொழில் முயற்சியாண்மையையும் திறன் விருத்தியையும் மையமாகக் கொண்ட விரிவான பயிற்சி அமர்வுகளை உள்ளடக்கியிருந்தது.
பணப் பரிசு வழங்கல்
குறித்த பயிற்சி அமர்வுகளில் ஆகச்சிறந்து விளங்கிய யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த நான்கு தொழில் முனைவோருக்கு இந்நிகழ்வில் பணப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இதில் பிரபாகரன் கவிசலா முதலாமிடத்தையும், டினே சசிக்குமார் மற்றும் சஜிலா சிவலோகநாதன் ஆகியோர் இரண்டாம் இடத்தையும், சிவனேஸ்வரி சிவநாதன் மூன்றாம் இடத்தையும் தமதாக்கியுள்ளனர்.
மேலும், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) கே.ஸ்ரீ மோகனன், வடக்கு மாகாண தொழிற்றுறை திணைக்கள பணிப்பாளர் செ.வனஜா, வைத்தியர் சுலோச்சனா, தொழில் முனைவோர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



