அவிசாவளை இரட்டைப்படுகொலை: ஊடகவியலாளர் உட்பட நால்வர் கைது
அவிசாவளையில் முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர் என்று அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்குத் தகவல் வழங்கியமை, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு முச்சக்கரவண்டி மூலம் போக்குவரத்து வசதிகளை வழங்கியமை, உதவி செய்தமை போன்ற காரணங்களுக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஊடகவியலாளர் ஒருவரும் அடங்குகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி இரவு, கேகாலை பகுதியில் உள்ள மரண வீடொன்றுக்கு ஓட்டோவில் பயணித்த குழுவினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது.

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 6 மணி நேரம் முன்

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
