எரிவாயு பிரச்சினை ஏற்பட அதிகாரிகளே காரணம்
எரிவாயு நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகளின் தவறு காரணமாக நாட்டில் எரிவாயு தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ(Johanston Fernando) தெரிவித்துள்ளார்.
இவர்களின் தவறு காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. பொறுப்புகளை ஏற்றுக்கொண்டவர்கள் அவற்றை சரியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
புது வருடத்தை முன்னிட்டு பத்தரமுல்லையில் அமைந்துள்ள பெருந்தெருக்கள் அமைச்சில் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் இன்று நடைபெற்ற வைபவத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே ஜோன்ஸ்டன் இதனை கூறியுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலையின் வெளியேறும் இடங்களில் நேற்று ஏற்பட்ட வாகன நெரிச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு அமைச்சு என்ற வகையில் தீர்வுகாண வேண்டும். அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் நலன்களுக்காக கடினமான தீர்மானங்களையும் எடுக்க நேரிடும்.
இப்படியான தீர்மானங்களை எடுக்கவில்லை என்றால், ஓரே இடத்தில் பாழ்பட்டு போவோம் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri