அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கட் அணியின் தலைவி அலிசா ஹீலி ஓய்வு
அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கட் அணியின் தலைவி அலிசா ஹீலி எதிர்வரும் மார்ச் மாதம் கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
35 வயதான விக்கெட் காப்பாளரான அவர்; தனது நாட்டிற்காக 15 ஆண்டுகளாக விளையாடி வருகிறார், அவர் அனைத்து வடிவங்களிலும் கிட்டத்தட்ட 300 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றின் ஊடாக 7,000 க்கும் மேற்பட்ட ஓட்டங்களை பெற்றுள்ளார்; விக்கட் காப்பாளராக 275 ஆட்டமிழப்புக்களை செய்துள்ளார்
இந்தநிலையில் எதிர்வரும் பெப்ரவரியில் வரவிருக்கும் இந்தியத்தொடர் அவுஸ்திரேலியாவுக்கான தமது கடைசி தொடராக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
போட்டித்தன்மை குறைவு
அவரது கணவர் அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆவார். இந்த நிலையில் அவுஸ்திரேலியாவுக்காக விளையாடுவதில் தனக்கு இன்னும் ஆர்வம் இருக்கிறது,
எனினும் போட்டித்தன்மையை ஓரளவு இழந்துவிட்டதாக தாம் உணர்வதால், ஓய்வு பெறுவது பொருத்தமானது என்று கருதுவதாக ஹீலி குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய அணி தலைவியாக பொறுப்பேற்ற ஹீலி,எட்டு உலகக் கிண்ண வெற்றிகளில் ஒருவராக இருந்துள்ளார்.
ஹீலி, அவுஸ்திரேலிய டெஸ்ட்டின் முன்னாள் வீரர் இயன் ஹீலியின் மருமகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri