அவுஸ்திரேலியாவின் 20 வருட தேர்தல் வரலாற்றை மாற்றிய அல்பானீஸ்
அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக தொழிலாளர் கட்சி வெற்றிப்பெற்றுள்ள நிலையில் மீண்டும், அந்தோணி அல்பானீஸ்(anthony-albanese) பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய வரலாற்றில் இது ஒரு மகத்தான வெற்றி என்றும் அல்பானீஸ் கூறியுள்ளார்.
2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் பதவியில் இருக்கும் பிரதமர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
வளர்ந்து வரும் அரசியல்
இது அல்பானீஸின் வளர்ந்து வரும் அரசியல் அந்தஸ்தையும் அவரது தலைமையின் மீதான வாக்காளர் நம்பிக்கையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என அந்நாட்டு அரசியல் ஆர்வளர்கள் கூறியுள்ளனர்.
குறிப்பிடத்தக்க வகையில், இந்தத் தேர்தல் எதிர்க்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
லிபரல் கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் பிரிஸ்பேனில் உள்ள தனது டிக்சன் தொகுதியை தொழிற்கட்சியின் அலி பிரான்சிடம் இழந்தமை அவரது பின்னடைவை மேலும் எடுத்துக்காட்டுகிறது என கூறப்படுகிறது.
இந்த அரிய அரசியல் தோல்வி, 2007 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜான் ஹோவர்டின் தொகுதி இழப்பை எதிரொலிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
