ப்ரியா-நடேஸ் குடும்பத்தை சந்தித்த அவுஸ்திரேலிய பிரதமர்!
தமிழ் குடும்பத்தை சந்தித்த பிரதமர்
நான்கு வருடங்களுக்கும் மேலாக குடியேற்ற தடுப்புக்காவலில் இருந்து மத்திய குயின்ஸ்லாந்திற்கு கடந்த வாரம் திரும்பிய இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் குடும்பத்தை அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தனி அல்பானீஸ் சந்தித்துள்ளார்.
கடந்த வாரம் அவர், குயின்ஸ்லாந்துக்கு சென்றிருந்தபோது நடேலிங்கம் குடும்பத்தை சந்தித்தார்.
குடியேறத் தடை இல்லை
ப்ரியா, நடேஸ் மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு மகள்களான கோபிகா மற்றும் தர்னிகா ஆகியோர், புதிய தொழிற்கட்சி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இணைப்பு விசாவில் மத்திய குயின்ஸ்லாந்து நகரத்தில் வசித்து வருகின்றனர்.
இணைப்பு விசாக்கள் காலாவதியானதை அடுத்து, 2018 இல் இந்த குடும்பத்தினர் குடியேற்ற காவலில் வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் தற்போது அந்த குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கு எந்த தடையும் இல்லை.
எனினும் அது, அமைச்சரின் முடிவில் தங்கியிருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அற்புதமான நண்பர்கள்
இதேவேளை தாம் ஏற்கனவே வாழ்ந்து வந்த சமூகத்திற்குத் திரும்பிவிட்டதாக குறிப்பிட்டுள்ள ப்ரியா, அற்புதமான நண்பர்களை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் அடுத்த வாரம், தமதுப பாடசாலை கல்வியை ஆரம்பிக்க ஆவலுடன் இருப்பதாக கோபிகாவும் தர்னிகாவும் தெரிவித்துள்ளனர்.
மகளால் பிரியா-நடேஸ் குடும்பத்திற்கு கிடைத்த அதிஸ்டம்!



