அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் ஆதம்பாவா எம்.பிக்குமிடையில் கலந்துரையாடல்
இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று (30) கலோயா லேக் கிளப் உணவகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, கிழக்கு பிராந்தியத்தினுடைய கடற்றொழில்,விவசாயம்,கைத்தொழில், கல்வி,உயர்கல்வி, விளையாட்டு, சுகாதாரம்,பெண்கள் வலுவூட்டல் மற்றும் சமகால அரசியல் தொடர்பாகவும் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார்.
2ஆம் கட்ட பேச்சுவார்தை
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மக்களுடைய தேவைகள் தொடர்பாக உயர்ஸ்தானிகருக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.
எதிர்வரும் நாட்களில் இந்த அபிவிருத்திகள் தொடர்பான 2ஆம் கட்ட பேச்சுவார்தைக்காக நாடாளுமன்ற உறுப்பினரை மீண்டும் சந்திக்க தாம் விரும்புவதாக இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இதே வேளை அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் உயர்ஸ்தானிய குழுவினர்களுடன் அம்பாறை மாவட்டத்தின் சமுக பொருளாதார மற்றும் அரசியல் தொடர்பான கலந்துரையாடலில் அவரது அலுவலகத்தில் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
