அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம் வடக்கு ஆளுநருடன் விசேட கலந்துரையாடல்
சமுத்திர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான
ஆரம்பகட்ட கள ஆய்வில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய நிபுணர்கள்அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த கலச்துரையாடலானது இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் பொருளாதார துறையின் முதலாம் நிலை செயலாளரின் தலைமையில் நேற்று (11.03.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
சமுத்திர பாதுகாப்பு
இதன்போது சமுத்திர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு மாகாண மக்களின் தற்போதைய வாழ்வியல் செயற்பாடுகள், பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுலாத்துறை, உட்கட்டமைப்பு வசதிகள், சமுத்திர பாதுகாப்பு, கடற்றொழில் செயற்பாடுகள், கண்ணிவெடி அகற்றுதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம், கௌரவ ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |