சர்வதேசத்தில் பேசுபொருளாக மாறியுள்ள மஞ்சள் ஆடை விவகாரம்
அவுஸ்திரேலிய அணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இலங்கை ரசிகர்கள் மேற்கொண்ட ஒரு செயல் சர்வதேசத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு வருகை தந்த போது, அந்நாட்டு கிரிக்கெட் சபை இலங்கை மக்களுக்கு நிவாரண நிதியொன்றையும் அறிவித்திருந்தது.
அத்துடன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இலங்கை வந்த பின்னர் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் டொலர் திரட்டும் பிரச்சார முயற்சியொன்றையும் முன்னெடுத்துள்ளனர்.

சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக மாறியுள்ள இலங்கையர்களின் செயல்
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் அவுஸ்திரேலிய - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து வந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும், அந்நாட்டுக்கும் நன்றி தெரிவிக்கும் பதாகைகளையும் ஏந்தியிருந்தார்கள்.

இலங்கையர்களின் இந்த செயல் சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் அமைப்புகள் மற்றும் நபர்கள், ஊடகங்கள் என்பன இது குறித்து பாராட்டி செய்திகளையும், பதிவுகளையும் இட்டுள்ளன.

அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri