இலங்கையிலிருந்து அகதிகளாக வெளியேறுபவர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை உணர்வற்ற வகையில் மேற்கொள்கிறதா அவுஸ்திரேலியா?
இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடையும் தஞ்சக்கோரிக்கையாளர்களை தடுக்கும் விதமாக ‘காணொளி-கேம் மற்றும் குறும்பட போட்டி’யை Zerochance.lk எனும் புதிய இணையதள அறிமுகத்தில் உள்ளடக்கப்பட்டது தொடர்பாக அவுஸ்திரேலியா அரசு மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த காணொளி-கேமில், அவுஸ்திரேலியாவைப் படகு வழியாகச் சென்றடைய எண்ணும் ஒரு ஆட்டக்காரர் எல்லைக் கண்காணிப்பில் சிக்குவது போன்றோ புயலில் சிக்குவது போன்றோ அல்லது மோசமான விளைவுகளில் சிக்குவது போன்றோ அவ்விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதே போல், அவுஸ்திரேலியாவை நோக்கி சட்டவிரோத புலம்பெயர்வை அடிப்படையாகக் கொண்ட குறும்பட போட்டியும் இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்த உணர்வற்ற செயலை கேட்பதற்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
இனப்படுகொலையிலிருந்து தப்ப மக்கள் வெளியேறுகிறார்கள். மக்கள் நிஜமான மனித உயிர்கள், காணொளி கேம் அல்ல. அவர்களுக்கு உதவ வேண்டியது, ஆபத்தான சூழலுக்குத் திருப்பி அனுப்பாமல் இருக்க வேண்டியது அவுஸ்திரேலியாவின் கடமை. இந்த கொடூரமான கொள்கைகள் நிறுத்தப்பட வேண்டும்,” எனப் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தமிழ் செயற்பாட்டாளர் சர்வதேச ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார்.
தமிழர்கள் தொடர்ந்து இலங்கையிலிருந்து வெளியேறி வரும் நிலையில் இப்படியொரு
பிரச்சார செயலை அவுஸ்திரேலியா இலங்கையுடன் இணைந்து மேற்கொண்டுள்ளமை குறித்து
மனித உரிமை மட்டத்தில் பல்வேறு விமர்சனங்கள் மேலெழுந்துள்ளது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri