இலங்கையில் பிறந்த பெண்ணுக்கு அவுஸ்திரேலியா வழங்கியுள்ள உயர் பதவி
சிம்பாப்வே நாட்டுக்கான அவுஸ்திரேலிய தூதுவராக இலங்கையில் பிறந்த மினோலி பெரேராவை அவுஸ்திரேலிய அரசாங்கம் நியமித்துள்ளது.
நியமனம் தொடர்பில் அறிவித்த அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் கென்பராவில் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பானிஸூடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சிம்பாப்வேவுக்கான அவுஸ்திரேலிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மினோலி பெரேரா, கொங்கோ, மலாவி, செம்பியா, மற்றும் கொங்கோ-பிரஸ்ஸாவில்லி ஆகிய நாடுகளுக்கான அவுஸ்திரேலியாவின் ராஜதந்திரியாக செயற்படுவார்.
இலங்கையில் பிறந்து அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நியமனம் பெற்ற முதலாவது தூதுவர் இவர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியா மற்றும் சிம்பாப்வே இடையிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
படு மாஸாக விஜய் வீட்டில் நடக்கும் காவேரியின் வளைபாப்பு... மகாநதி சீரியல் படப்பிடிப்பு தள வீடியோ இதோ Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri