இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா அணி அபார வெற்றி
இந்திய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றுள்ளது.
இந்திய அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்தியா- அவுஸ்திரேலியா அணி
இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு பெர்த்தில் தொடங்கியது.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மிகுந்த ஏமாற்றம் அளித்தனர். ரோகித் சர்மா 1 பவுண்டரியுடன் 8 ஓட்டங்களில் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.
விராட் கோலி ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் சுப்மன்கில் 10 ஓட்டங்களில் (2 பவுண்டரி), நாதன் எல்லீஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 8.1 ஓவரில் 25 ஓட்டங்களில் 3 விக்கெட்டை இழந்து திணறியது. அதன்பின் மழை அடிக்கடி குறுக்கீடு செய்தது. 16.4 ஓவரில் மழை குறுக்கீடு செய்தது. அதன்பின் போட்டி 26 ஓவராக குறைக்கப்பட்டது.
அவுஸ்திரேலியா அணி
16.4 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்க 52 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல், அக்சர் படேல் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தினர்.
20ஆவது ஓவரின் கடைசி பந்தில் அக்சர் படேல் ஆட்டமிழந்தார். அவர் 38 பந்தில் 31 ஓட்டங்கள் அடித்தார். அடுத்து வந்த வோஷிங்டன் சுந்தர் 10 பந்தில் 10 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
மறுமுனையில் கே.எல். ராகுல் 31 பந்தில் 38 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதிஷ் குமார் ரெட்டி 11 பந்தில் 19 ஓட்டங்கள் அடிக்க இந்தியா 26 ஓவரில் 136 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
டக்வொர்த் லீவிஸ் விதிப்படி அவுஸ்திரேலியாவுக்கு 131 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து ஆடிய அவுஸ்திரேலிய அணி 21.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக மிட்செல் மார்ஸ் 50 ஓட்டங்களும் ஜோஷ் பிலிப்பெ 37 ஓட்டங்களும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.




