பரபரப்பான வெற்றியை பெற்ற இங்கிலாந்து அணி: சமநிலையில் முடிந்த ஆஷஸ் தொடர்
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கு மட்டும் பிரத்தியேகமாக நடைபெறும் ஆஷஸ் கிரிக்கெட் போட்டி இனிதே நிறைவடைந்துள்ளது.
இந்த ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5வது போட்டியில் இங்கிலாந்து அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சுவாரஸ்ய வெற்றி பெற்றுள்ளது.
4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், அவுஸ்திரேலிய அணி 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனால், இந்த தொடரை சமனில் முடிக்க இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் களமிறங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 295 ஓட்டங்கள் எடுத்தது. 12 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் அதிரடியாக விளையாடி 395 ஓட்டங்களை சேர்த்தது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அணிக்கு 384 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அவுஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 60 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கவாஜா 72 ஓட்டங்கள் எடுத்தார்.
மழையினால் நஷ்டத்தை சந்தித்த இங்கிலாந்து
சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 43 ஓட்டங்களில் மோயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவுஸ்திரேலிய அணி சரிவை சந்திக்க நேர்ந்தது.
மிட்செல் மார்ஷ் 6 ஓட்டங்களிலும் , ஸ்டோக்ஸ் பூச்சிய ஆட்டமிழப்பிலும் , பாட் கம்மின்ஸ் 9 ஓட்டங்களிலும் வெளியேற, இங்கிலாந்து வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அவுஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கேரி , இங்கிலாந்து அணியின் வெற்றியை தடுத்தார். இறுதியில், தனது கடைசி டெஸ்டில் விளையாடிய பிராட் , முர்பி மற்றும் அலெக்ஸ் கேரி விக்கெட்டை தனது அனுபவ பந்துவீச்சு மூலம் வீழ்த்த, இங்கிலாந்து அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா 2க்கு2 என்ற கணக்கில் வென்று சமனில் முடிந்தது. 4வது டெஸ்டில் மட்டும் மழை பெய்யாமல் இருந்திருந்தால், இந்நேரம் இங்கிலாந்து அணி தொடரை வென்று இருக்கும்.
இங்கிலாந்து மண்ணில் அவுஸ்திரேலிய அணி 21 ஆண்டுகளாக ஆஷஸ் தொடரை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |