இந்திய பந்துவீச்சாளர்களிகளின் ஆதிக்கத்தால் தடுமாற்றத்தில் அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தனது பந்துவீச்சாளர்களின் திறமையால் வலுவான நிலையை அடைந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் இன்று ஆரம்பமான குறித்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.4 ஓவர்களில் 150 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
முதல் இன்னிங்ஸ்
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இதன்படி 27 ஓவர்கள் நிறைவில் அவுஸ்திரேலிய அணி 67 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில், இந்திய அணி 83 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
மேலும். இன்றைய ஆட்ட நேர முடிவின் போது அவுஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரி 19 ஓட்டங்களையும், மிட்செல் ஸ்டார்க் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri