இலங்கை பெட்ரோலிய சந்தையில் கால்பதிக்கும் அவுஸ்திரேலிய நிறுவனம்
அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் லிமிடெட், இலங்கை சந்தையில் பெற்றோலிய பொருட்களை விநியோகிப்பதற்காக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் நாட்டின் சில்லறை பெட்ரோலியத் துறையை மேலும் தாராளமயமாக்குவதற்காக இலங்கை அரசாங்கம் வழங்கிய அனுமதியின் அடிப்படையில் இந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
யுனைடெட் குழுமம் அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் பல வணிகங்களையும் கொண்டுள்ளது.
50 புதிய எரிபொருள் நிலையங்கள்
எனினும் இலங்கையிலேயே முதல்முறையாக, நிறுவனம் அவுஸ்திரேலியாவிற்கு வெளியே சில்லறை பெட்ரோலிய வணிகத்தை விரிவுபடுத்துகிறது.
இந்நிலையில், இந்த நிறுவனத்துக்கு இலங்கையில் நாடு முழுவதும் தற்போதுள்ள 150 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன்படி அத்துடன், அதற்கு வழங்கப்பட்டுள்ள உரிமையின் கீழ் 50 புதிய எரிபொருள் நிலையங்களைக் அமைப்பதற்கான உரிமையும் உள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு
மேலும், யுனைடெட் பெட்ரோலியம் அவுஸ்திரேலியா இலங்கையில் யுனைடெட் பெட்ரோலியம், லங்கா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை இணைத்துள்ளது.
இதன் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக முன்னாள் நிர்வாக சபை உறுப்பினரும் பெட்ரோலியத் துறையில் நிபுணருமான பிரபாத் சமரசிங்க பணிப்பாளர் பதவியை பொறுப்பேற்றுள்ளார்.
மேலும், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்சனா ஜயவர்தன மற்றும் யுனைடெட் பெட்ரோலியம் அவுஸ்திரேலியாவின் உரிமையாளர் எடி ஹிர்ஸச் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |