நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவாகிய கணக்காய்வு விபரம்! வெளியான அறிக்கை
இலங்கை அரசாங்கம் தற்போது எதிர்நோக்கி வரும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக டொலர் பிரச்சினை காணப்படுகின்றது.
இலங்கை எதிர்நோக்கி வரும் டொலர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் சீன அரசாங்கம் 1.5 பில்லியன் டொலர்களை வழங்க உள்ளதாக அரசாங்கம் அணை்மையில் அறிவிப்பொன்றினையும் விடுத்திருந்தது.
இவ்வாறான சூழ்நிலையில், இலங்கை அரசாங்கம் பிற நாடுகளிலிருந்து கடன் அடிப்படையில் பெற்றுக்கொண்ட கடனை தொகையை அடுத்த மாதம் செலுத்த வேண்டியுள்ளதால் 500 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் தவணைகளை மீளச் செலுத்துவதற்கு மத்திய வங்கி முன்னுரிமை அளித்து வருவதால், டொலர் தற்சமயம் வெளியிடப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்து.
இதன் காரணமாக துறைமுகத்தில் தேங்கியுள்ள சுமார் 1500 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க தற்போது டொலர்களை வழங்க முடியாது என இலங்கை மத்திய வங்கி, வர்த்தக அமைச்சுக்கு அறிவித்திருந்தது.
இதன் காரணமாக நாட்டில் அடுத்த மாதமளவில் கடும் பஞ்சம் ,உணவுப்பற்றாக்குறை நிலவும் எனவும் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில்,கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான அறிக்கையை தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் நீங்களும் தெரிந்துக்கொள்ளலாம்.



பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan