லசந்தவின் கொலை விசாரணை தொடர்பில் சட்டமா அதிபரின் புதிய உத்தரவு
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான விசாரணையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் புதிய உத்தரவை பிறப்பிக்க உள்ளார்.
எனினும் இந்த உத்தரவு குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்று கொழும்பின் ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, லசந்த விக்கிரமதுங்கவின் வாகன ஓட்டுநரை கடத்திச் சென்று சாட்சியங்களை அழித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் பரிந்துரை செய்திருந்தார்.
அநுரகுமார திசாநாயக்க
எனினும் இது குறித்து பொதுமக்கள் மத்தியில் எழுந்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து சட்டமா அதிபர் புதிய முடிவை எடுத்துள்ளார்.
இதற்கிடையில் அண்மையில் சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இடையேயான சந்திப்பின் போது, குறித்த மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சட்டமா அதிபர் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார்.
எனினும் தமது நிலைப்பாட்டை ஏற்க, அரசாங்கம் தயாராக இல்லை என்றால், தமது பரிந்துரையை எதிர்த்து பேராணை மனுவை தாக்கல் செய்யலாம் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.
அதேநேரம் தமது நிலைப்பாடு தொடர்பாக சட்டமா அதிபர் கடந்த வெள்ளிக்கிழமையன்று விளக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார் அதில், லசந்த விக்கிரமதுங்கவின் கொலை வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை என்றும் அவரது வாகன ஓட்டுநரின் கடத்தல் மற்றும் லசந்தவின் குறிப்புப்புத்தகம் காணாமல் போனமை தொடர்பான வழக்குகளில் இருந்தே குறித்த மூவரும் விடுவிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 16 மணி நேரம் முன்

ரோஹினியை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய விஜயா, என்ன விஷயம் தெரிந்தது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

Fire பட வெற்றிக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ரச்சிதா... எந்த டிவி தொடர், முழு விவரம் Cineulagam

இந்தியன் வங்கியின் IND Super 400 நாட்கள் FD திட்டத்தில் ரூ.4,44,444 முதலீடு செய்தால்.., எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
