சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் பதவியில் இருந்து ஓய்வு
சட்டமா அதிபர் பதவியில் இருந்து தாம் தற்போது ஓய்வு பெற்றுள்ளதாக சஞ்சய் ராஜரத்தினம் அறிவித்துள்ளார்.
ஜூன் மாதம் 26ஆம் திகதி அவருக்கு 60 வயதான நிலையிலேயே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, அவரது சேவையை ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரை இரண்டு தடவைகள் அரசியலமைப்பு பேரவையினால்; அங்கீகரிக்கப்படவில்லை.
மட்டக்களப்பில் அபிவிருத்தி என்ற போர்வையில் பெரும்பான்மை சமூகத்தினரின் ஆதிக்கம்: சாணக்கியன் எம்.பி. பகிரங்கம்
ஜனாதிபதியின் பரிந்துரை
இந்த மாத முற்பகுதியில் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவையை நீடிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரையை பெரும்பான்மை வாக்குகளால் நிராகரித்தது.
இதனையடுத்து அரசியலமைப்பு பேரவை நேற்று முன்தினம் (26) மீண்டும் கூடி இந்த விடயத்தை மீள்பரிசீலனை செய்தது.
இதன்போது, 60 வயதை எட்டியதன் பின்னர் சட்டமா அதிபருக்கான நீடிப்புக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் பேரவைக்கு இல்லை என தீர்மானிக்கப்பட்டதாக அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அரசியலமைப்பு பேரவையின் தீர்மானம் நேற்று முன்தினம்(26) ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டதாக அந்த உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |