சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்
பயங்கரவாத தடுப்புச் சட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அல் சுஹாரியா மதரசா பாடசாலையின் முதல்வர் சலீம் கான்முகமது ஆகியோருக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.
இருவருக்கும் எதிராக பயங்கரவாத மற்றும் சர்வதேச சட்டங்களின் கீழ் ஐந்து குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் நிஷாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
2018 ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 31,வரையிலான காலத்திற்குள் இருவரும் அல் சுஹாரியா மதரசாவில் இணைக்கப்பட்ட மாணவர்களுக்கு பல தீவிரவாத கருத்துக்களை புகுத்தினர் என்ற குற்றச்சாட்டும் இதில் உள்ளடக்குகிறது.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri
