சட்டமா அதிபர் திணைக்களம் சட்டத்தை மதிப்பதில்லை-முஜிபுர் ரஹ்மான்
நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது சட்டத்தை மதிப்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்கள் சட்டத்தின் நியாயத்தை எதிர்பார்க்கின்றனர்

கடந்த காலங்களில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் வழக்குகள் தொடர்ந்து திரும்பபெறப்படடன. இது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நான் சட்டமா அதிபர் திணைக்களத்தில் விபரமான அறிக்கையை ஒன்றை கோரினேன்.
தற்போது சுமார் ஒன்பது மாதங்கள் கடந்து விடடது. இதுவரை சட்டமா அதிபர் திணைக்களம் அந்த அறிக்கையை வழங்கவில்லை. நாட்டு மக்கள் சட்டத்தின் நியாயத்தை எதிர்பார்க்கின்றனர்.
சட்டமா அதிபர் திணைக்களம் இப்படியாக செயற்படும் போது ஏற்பட போகும் நிலைமை என்ன?.
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமல்ல வெளிநாட்டவர்களும் நாடாளுமன்றத்தில்

அதேவேளை நாடாளுமன்றத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் மாத்திரமல்ல, வெளிநாட்டுவர்களும் இருக்கின்றனர் என்ற கதையும் உலவுகிறது.
இதனால், இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் யார் என்பதை அடையாளம் காண தெரிவுக்குழுவை நியமிக்குமாறும் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.