யாழில் வாள்களுடன் கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது
வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்து வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தி நகைகளைக் கொள்ளையடித்து தப்பித்த கும்பலைச் சேர்ந்த நால்வர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளையிட்ட நகைகள், வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாள்களுடன் வீட்டு புகுந்து கொள்ளை
யாழ். கோப்பாய் மூன்று கோவிலுக்கு அருகில் கடந்த ஜனவரி 3ஆம் திகதி அதிகாலை 1.30 மணிக்கு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
5 பேர் கொண்ட கும்பலொன்று வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை அடித்து, அச்சுறுத்தி 12 தங்கப் பவுண் நகைகளை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணை
இது தொடர்பில் யாழ். பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன்,சுன்னாகம், இணுவில் பகுதிகளைச் சேர்ந்த 25, 26 வயதுகளையுடைய நால்வர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடம் கொள்ளையிட்ட நகைகளில் ஒரு பகுதி, அடகு வைக்கப்பட்ட நிலையில் பற்றுச்சீட்டுகள் மற்றும் வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த ஜனவரி 15ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று வீதியில் சென்ற
ஆசிரியை தாக்கிவிட்டு நகையை கொள்ளையிட்ட சம்பவத்துடனும் இந்த சந்தேக
நபர்களுக்கு தொடர்புள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
