மட்டக்களப்பில் பெண்களுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு பேரணி முன்னெடுப்பு
சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவினை செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் பெண்களின் உரிமையினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மட்டக்களப்பு கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“சர்வதேச பெண்கள் தினத்திற்கு இணைவாக நிலையான வாழ்தலைநோக்கி ஒன்றிணைவோம்..” என்னும் தொனிபொருளில் சூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் பெண்கள் அமைப்புகளுடன் இணைந்து இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதனை முன்னிட்டு சூரிய வள நிலையத்திலிருந்து பேரணியானது ஆரம்பமாகி மட்டக்களப்பு நகர் ஊடாக பறை மேளங்கள் முழங்க பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பெண்களின் வினோத உடைகள் அணிந்தவாறு இந்த பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.
கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுப்பு
பெண்களின் பிரதிநிதித்துவம் தீர்மானம் எடுக்கும் மட்டத்தில் அவசியமானது, எல்லா சந்தர்ப்பத்திலும் ஒப்புதல் இன்றி உடலுறவு குற்றமே, அனைவருக்கும் குறைந்தபட்ச திருமணவயது 18ஆகவேண்டும், வீட்டு வன்முறை வேண்டாம், நீதிகோரும் சகோதரிகளாக நாங்கள் ஒன்றிணைவோம் போன்ற பல்வேறு சுலோகங்களை தாங்கியவாறு பேரணியானது நடைபெற்றுள்ளது.

பேரணியானது கல்லடி பாலம் ஊடாக கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள ஸ்ரீமுருகன் விளையாட்டு மைதானத்தினை சென்றடைந்ததும் அங்கு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் விசேடமாக சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னெடுக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.



அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri