முழுமையாக செய்யப்படாத உப்பு உற்பத்தி: இளங்குமரன் சுட்டிக்காட்டு
ஆனையிறவு உப்பளத்தில் இதுவரையில் உப்பு உற்பத்தினை முழுமையாக செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்14.05.2025 ஆணையிறவு உப்பளம் பகுதியில்மேற்கொள்ளப்பட்டபோராட்டத்தை அடுத்து அங்கு விஜயம் செய்த அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்பொழுது உப்பு உற்பத்தி செய்யும் இயந்திரம் பழுதடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இதற்கான உதிரி பாகங்களை இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டு தற்பொழுது கொழும்பை வந்தடைந்துள்ளளன.
உப்பு உற்பத்தி
ஓரிரு தினங்களில் உப்பளத்தின் உப்பு உற்பத்தி மீண்டும் செயல்பட ஆரம்பித்த பின்னர் நியாயமான விலையில் ஆனையிரவு உப்பு என்ற பெயருடன் உப்பளத்தின் உப்பை பெற்றுக் கொள்ள முடியும்.
இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது நியாயமானது. அவர்களுக்கான அடிப்படை உரிமை.
போக்குவரத்து வசதி என்பவனவற்றை உப்பு உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபின்னர் படிப்படியாக பணியாளர்களுக்கான அனைத்துநன்மைகளும் வரப்பிரசாதங்களும் பெற்றுக் கொடுக்கப்படும்” என தெரிவித்தார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 7 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
