அநுர அரசாங்கத்தின் சட்டங்களை முற்றாக நீக்கக் கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!
பயங்கரவாத தடை சட்டத்தை முற்றாக நீக்குவதோடு புதிதாக வரவுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் புதிய சட்ட வரைபை நீக்கக் கோரி பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் என்ற கோஷத்துடன் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டமானது, நேற்று(28.02.2026) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
அநுர அரசாங்கத்திற்கு எதிராக அறிக்கை
தாயக செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டமானது, யாழ். பொது நூலகத்தில் இருந்து ஆரம்பமாகி A9 வீதி ஊடாக யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு ஆளுநர் தலைமை அலுவலகத்தை சென்று நிறைவடைந்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அநுர அரசாங்கத்துக்கு எதிராக கோஷங்களை முன்வைத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் காணி அபகரிப்புக்களை நிறுத்துதல் போன்ற கோஷங்களை முன்வைத்துள்ளனர்.
போராட்டத்தின் இறுதியில் ஐ.நா சபைக்கு அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையும் ஊடகங்களுக்கு வாசிக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பொத்துவில் தொடக்கம் போலிக்காண்டி அமைப்பின் இணை இணைப்பாளர் வேலன் சுவாமிகள் , வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பிரதேச சபை உறுப்பினர்கள் மதத் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மத்திய கிழக்கு போர் சூழல்! கேள்விக்குறியாகும் இலங்கையர்களின் பாதுகாப்பு - அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை









இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri