விலை அதிகரிப்புக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள பிரதேச சபை உறுப்பினர்
கரைச்சி பிரதேச சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த சபை உறுப்பினர் சண்முகராஜ ஜீவராஜா (Shanmukaraja Jeevaraja) விலை அதிகரிப்பு தொடர்பில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
விலை அதிகரிப்பால் மக்களிற்கு சுமையை ஏற்படுத்தியுள்ள அத்தியாவசிய பொருட்களுடன் அவர் இன்று இடம்பெற்ற பிரதேசசபை அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது, சீமெந்து, பால்மா, மா, மஞ்சள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் என்பவற்றை உடலில் சுமந்தும், கழுத்தில் தூக்கு கயிற்றினை அணிந்தும் அமர்வில் அவர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மக்களை பெரும் சுமைக்குள் தள்ளியுள்ளதாகவும் அரசாங்கத்தினை இதன்போது சபையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில் பிரதேச சபை உறுப்பினரின் போராட்டம் நியாயமானது என பிரதேச சபை தவிசாளர் சபையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri