உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சீர்குலைக்க அரச அதிகாரிகள் முயற்சி: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சீர்குலைக்கும் அரச அதிகாரிகளின் முயற்சிகள் குறித்து தனது அதிருப்தியை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் நடைமுறையில் தலையிடுவதற்குப் பொறுப்பானவர்கள் அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் என்று சங்கம் மீண்டும் வலியுறுத்தியது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அனைத்து தேர்தல்களும் இலங்கையின் ஜனநாயக செயற்பாட்டின் இன்றியமையாத அங்கம் எனவும் அவை தடைப்படக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கை
கடந்த சில வாரங்களாக திறைசேரியின் செயலாளர், அரச அச்சக அதிகாரி மற்றும் ஏனைய அரசாங்க அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகள் தேர்தலை நிறுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியை தெளிவாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதன் மூலம் மக்களின் வாக்குரிமையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாகவும் மக்களின் இறையாண்மை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள், நிறைவேற்று அதிகாரம் அல்லது சட்டவாக்க சபைக்கு
தேர்தல்களுக்கும் நிதி வளங்களை ஒதுக்குவதை தடுக்கும் அபாயகரமான முன்னுதாரணமாக
அமையும் என்று சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
