சட்டவிரோதமாக இஞ்சி கடத்த முற்பட்டோர் கைது
கற்பிட்டி - பாலாவி பிரதான வீதியின் தழுவ பகுதியில் வானில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக இஞ்சி கடத்த முற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக இஞ்சி கடத்தப்படுவதாக கற்பிட்டி பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய
கற்பிட்டி - பாலாவி பிரதான வீதியின் தழுவ பகுதியில் வானொன்ற மறித்து சோதனைக்கு உற்படுத்தியுள்ளனர்.
சோதனை நடவடிக்கை
இதன்போது 10 மூடைகளில் 400 கிலோ கிராம் உலர்ந்த இஞ்சி இருந்தமைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த இஞ்சி மூடைகளை நுரைச்சோலை தழுவ பகுதியிலிருந்து கண்டிக்கு கடத்த முற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்ட 34 மற்றும் 42 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் கண்டியைச் சேர்ந்தவர்கள் எனவும் இதன்போது பொலிஸார் தெரிவித்தனர்.
இஞ்சி மூடைகள் கடத்தலுக்கு பயன்படுத்திய வான் ஆகியவற்றை கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் குறிப்பிட்டனர்.















6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
