உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்த முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்:அநுரகுமார திஸாநாயக்க
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்த முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, திறைசேரி செயலாளர் மகிந்த சிறிவர்தனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாளிகாவத்தையில் இடம்பெற்ற பேரணியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு வேண்டுமென்றே இடையூறு விளைவிப்பது மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும்.
பொருளாதார நெருக்கடி
அரச வருமானம் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் தேர்தலுக்காக மேலதிக நிதியைப் பெறுவது திறைசேரிக்கு மிகவும் சவாலானது என சிறிவர்தனவினால் கடந்த வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக் கடதாசி தொடர்பில் அனுரகுமார திசாநாயக்க தமது எச்சரிக்கையை விடுத்தார்.
நாடாளுமன்றமே தேர்தலுக்குப் பணம் ஒதுக்க முடிவு செய்துள்ள நிலையில், தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்க மறுக்கும் நிதிச் செயலாளரின் அதிகாரம் என்ன என்றும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
நிதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது என்று கூறிய அனுரகுமார, திறைசேரியின்
செயலாளரால் நிதி வழங்கப்படாவிட்டால், அது வேண்டுமென்றே தேர்தலுக்கு இடையூறாக
கருதப்படும் என்றும் குறிப்பிட்டார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
