கோவிட் தொற்றால் இறந்தவரின் உடலை மறைமுகமாக அடக்கம் செய்ய முயற்சி
வீட்டில் உயிரிழந்த கோவிட் தொற்றிய நபரின் சடலத்தை சுகாதார துறையினருக்கு அறிவிக்காது அடக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியை பலாங்கொடை தெஹிகஸ்தலாவ கிராம சேவகர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைத்து தடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. பிரதேசவாசிகள் வழங்கிய தகவலை அடுத்தே அதிகாரிகள் உடல் அடக்கம் செய்வதை தடுத்துள்ளதுடன் உடலை பலாங்கொடை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பலாங்கொடை தெஹிகஸ்தலாவ பிரதேசத்தில் வசித்து வந்த 75 வயதான அப்துல் ஹமீட் என்பர் தனியார் மருத்துவமனை ஒன்றில் என்டிஜன் பரிசோதனை செய்துக்கொண்டுள்ளதுடன் அவருக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
கோவிட் தொற்றுக்கு உள்ளான அவர், நேற்றைய தினம் அதிகாலை வீட்டில் மரணமடைந்துள்ளார். அவருக்கு கோவிட் வைரஸ் தொற்றி இருப்பது பற்றி உறவினர்கள் சுகாதார துறையினருக்கு அறிவித்திருக்கவில்லை.
இஸ்லாமிய சமய சம்பிரதாயத்தின்படி உடலை அடக்கம் செய்ய தயாராகிய போது, பிரதேசவாசிகள் அது குறித்து கிராம சேவகருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர் பலாங்கொடை பொது சுகாதார ஊழியர்களுக்கு சம்பவம் பற்றி அறிவித்துள்ளார்.
கோவிட் காரணமாக குறித்த நபர் உயிரிழந்திருப்பது அப்போது உறுதியாகியுள்ளது. அதிகாரிகள் உடலை பலாங்கொடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 12 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
