கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்சி! - ஏழு பேர் கைது (Photo)
கிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரம் பகுதியில் புதையல் அகழ்வதற்காக இரண்டு வாகனங்களில் வந்த ஏழு பேர் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து புதையல் தேடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்கேனர் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கைதானவர்களில் ஒருவர் பொலிஸ் கான்ஷ்டபிள் என்று தெரியவந்துள்ளது.
இராமநாதபுரம், சம்புக்குளம் பகுதியில் புதையல் அகழ வந்ததாக அவர்கள் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
குறித்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சி தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைதுகள் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.






இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண் மீது பொலிசார் வழக்குப்பதிவு! என் உயிரை கூட தருவேன் என ஆவேச பதிவு News Lankasri

தம்பதியாய் வந்த ஜேர்மன் பெண் - இந்திய இளைஞருக்கு சோதனை! உயிரை காப்பாற்றி கொள்ள ஓடிய பரிதாபம்.. வீடியோ News Lankasri
