ஓமந்தையில் விகாரை கட்டும் முயற்சி மக்கள் போராட்டத்தால் தடுத்து நிறுத்தம்

Sri Lanka Police Vavuniya Northern Province of Sri Lanka
By Rakesh Jul 09, 2025 12:07 AM GMT
Report

வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள அரச காணிக்குள் ஓமந்தைப் பொலிஸார் அத்துமீறிச் சென்று துப்புரவு செய்து அதில் விகாரை அமைக்க மேற்கொண்ட முயற்சி நேற்று(08) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் அந்தப் பகுதியில் கூடியவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஓமந்தையின் ஏ - 9 வீதியில் பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் தனியார் உரிமை கோரி வரும் அரச காணி ஒன்றைப் பொலிஸார் துப்புரவு செய்து அதைச் சுற்றி வேலி அமைக்க முற்பட்ட வேளை, அங்கு கூடிய அரசியல்வாதிகள், பொதுமக்களால் நிறுத்தப்பட்டதோடு விகாரை அமைக்கும் முயற்சியும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் காணி தொடர்பில் கடந்த பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், அதைப் பொலிஸார் அபகரிக்கும் செயற்பாட்டை நிறுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய வரிமுறை.. ஆபத்தில் சர்வதேச நிறுவனங்கள்

இலங்கையில் விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய வரிமுறை.. ஆபத்தில் சர்வதேச நிறுவனங்கள்

அகற்றப்பட்ட பொலிஸார்

இந்நிலையில், ஓமந்தைப் பொலிஸாருக்கு அந்த அரச காணியில் எவ்விதமான அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் எனப் பிரதேச செயலாளரால் எழுத்து மூலமான கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஓமந்தையில் விகாரை கட்டும் முயற்சி மக்கள் போராட்டத்தால் தடுத்து நிறுத்தம் | Attempt To Build Temple Omanthai Halted By Public

எனினும், பொலிஸார் அந்தக் காணியைச் சுத்தம் செய்து அதனைச் சுற்றி வேலி அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து, அங்கு கூடிய வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன், வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் தவிசாளர் பி. பாலேந்திரன், வவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் எஸ்.சஞ்சுதன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். தவபாலன் உட்பட் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் செ. மயூரன், மாநகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு குறித்த காணிக்குள் பிரவேசித்து அங்கிருந்த பொலிஸாரையும் அகற்றினர்.

வேலி இடும் பணிகள்

இதையடுத்து பொலிஸ் நிலையத்துக்குச் சென்று பொலிஸ் பொறுப்பதிகாரியுடனும் அவர்கள் கலந்துரையாடினர்.

ஓமந்தையில் விகாரை கட்டும் முயற்சி மக்கள் போராட்டத்தால் தடுத்து நிறுத்தம் | Attempt To Build Temple Omanthai Halted By Public

இதன்போது, பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த காணியில் விகாரை அமைக்கும் திட்டம் இல்லை எனவும், தமது கட்டுப்பாட்டில் 2009ஆம் ஆண்டில் இருந்து அந்தக் காணி காணப்படுகின்றது எனவும், அதைத் தமது மைதான தேவைக்காகவே புனரமைப்பதாகவும், எவ்விதமான கட்டடங்களும் கட்டப்படாது எனவும் தெரிவித்ததை அடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

எனினும், அந்தக் காணியைப் பொலிஸார் அபகரிப்பதற்கு விட முடியாது எனவும், அவ்வாறு அபகரிக்கும் பட்சத்தில் தொடர்ந்தும் தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அங்கு குழுமியிருந்தவர்கள் தெரிவித்தனர். எனினும், காணிக்கு வேலி இடும் பணிகள் தொடர்ந்தும் தற்போதும் நடைபெற்று வருகின்றன. 

உலகின் மனசாட்சியை உலுக்கும் செம்மணி: சிறீதரனின் வேண்டுகோள்

உலகின் மனசாட்சியை உலுக்கும் செம்மணி: சிறீதரனின் வேண்டுகோள்

மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு: யாழில் இளம் குடும்பஸ்தரின் துயர முடிவு

மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு: யாழில் இளம் குடும்பஸ்தரின் துயர முடிவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US