ராஜபக்ச அரசாங்கத்தை கொண்டுவருவதற்காக மீண்டும் விடுதலைப்புலிகளை உருவாகின்றார்கள் : தர்மலிங்கம் சுரேஸ் (Photos)
ராஜபக்ச அரசாங்கத்தை மீண்டும் கொண்டுவருவதற்கும், சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவுக்கு உள்ள எதிர்ப்பினை சமாளிப்பதற்காகவும் மீண்டும் விடுதலைப்புலிகள் உருவாகின்றார்கள் என்ற நிலையினை ஏற்படுத்த முனைவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவு வாரத்தின் ஐந்தாவது நாள் இன்று மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐ. நாவின் பொறுப்புக்கூறல் என்ற விடயத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக புலிக்காய்ச்சல் ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரால் 17தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட நினைவுத்தூபி அருகே இன்று முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது நினைவுத்தூபியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட பொதுமக்கள் ஈகச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் கு.குணசேகரன் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri